இது நடந்தப்போ நாங்க மூன்றாவது ஆண்டு இஞ்ஜினியரிங் மாணவர்கள். நான் நான்கு நன்பர்களோடு எங்கள் கல்லூரி-க்கு அருகில் ஒரு டவுன்-இல் ரூம் எடுத்து தங்கியிருந்தேன். சாயந்திரம் ஆனா நேரா என்னோட ரூம் மொட்டை – மாடியிலெ அரட்டை கச்சேரி தான். என்னொட ரூம் – மேட்ஸ் பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ: முதலில் லொடுக்கு, ரொம்ப நல்ல பையன் – ஆனா கூரு கொஞ்சம் கொறைவு. அப்புறமா கருத்து கந்தசாமி, வாய தொறந்தா நாள் முழுக்க கருத்து சொல்லிக்கிட்டே இருப்பான். இவனுக்கு ஒரு நல்ல பழக்கம் என்னான்னா ப்ராப்ளெம் ஸால்விங் ஸ்கில். ஓன்னுமே இல்லாத சப்ப மேட்டர எல்லாம் பெரிய பிரச்சினை ஆக்கி அத அழகா ஸால்வ் பன்னுரதா நெனைச்சிட்டு சொதப்புவான். இவனால வெளியிலே போற எதையோ எடுத்து ஷார்ட்ஸ் – க்குள்ள வுட்டுக்கிட்டவங்க நெறய பேரு. மொத்தத்துல இவரு ஒரு நடமாடும் ரிவிட்டு ஃபேக்டரி.
இன்னொருத்தன் சந்தன குமார். எப்பவாச்சும் கல்லூரி-க்கு வருவான். ரொம்ப நல்ல நன்பன். மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட்.
இன்னொரு மறக்க முடியாத பையன் கானா –பூனா, அதாவது கபடி புயல். இவனோட நிஜ பேரு வெர. நாம சும்மா கானா பூனா – ன்னு கூப்பிடலாம். இந்தப் பதிவோட ஹீரோ இவரு தாங்கோ. இவனும் மெக் தான்.
அப்புறம் இன்னொரு முக்கியமான ஆளு. எங்க பசங்களுக்கு எப்படி கருத்து கந்தசாமி –யோ அது மாதிரி என்னொட க்ளாஸ்ஸுல ஒரு லேடி கருத்து உன்டு. அவளும் இப்பிடி தான். ஓரு நடமாடும் ரிவெட் ஃபேக்டரி.
லொடுக்கு அவளோட நல்ல ஃப்ரென்ட். அவன் கிட்ட தான் அன்னன்னிக்கு ரிவெட் வாங்குறவன் பேர சொல்லுவா. அவ யாரு பேர சொல்லுறாளோ அந்தப் பையன் அவ்ளோ நாள் கஷ்டப்பட்டு தேத்துன ஃபிகரே அவன கழட்டி கடாசிட்டாள்னு அர்த்தம்.
சரி மேட்டருக்கு வர்றேன். நம்ம கானா – பூனா ஒரு கம்ப்யூட்டர் பொன்னு கிட்ட நல்லா ஃப்ரென்ட்லி –யா இருந்தான். நல்ல பேசுவா-ன்னு சொல்வான். ஓரு ஆறு மாசம் கழிச்சு அந்த நாறப்பய அவள லவ் பன்னுறதா சொன்னான். (ஒனக்கு ரிவிட்டு கன்ஃபர்ம்-டா).
அன்னிக்கு சாயந்திரம் எப்பவும் போல மொட்டை – மாடியில் டாப் ஆரம்பிச்சுது. நம்ம கானா பூனா மொகத்துல ஒரு இனம் புரியாத பூரிப்பு. “என்னடா பயங்கர சந்தோஷமா இருக்க போல” மெல்ல ஆரம்பித்தோம்.
அவன் முகம் ரொம்பவே பிரகாஸமானது. வானத்தை ஸீரியஸாகப் பார்த்துக் கொன்டே சொன்னான், “மச்சான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் – டா”.
மனதிற்குள் திட்டினேன், “நாறப்பயலே, அதத்தானடா நாங்களும் சொன்னோம், மேட்டர சொல்லுவியா, நாயி ஒவரா பில்டப் குடுக்குது”.
பொதுவா இந்தப் புதுசா லவ் பன்ற பசங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது என்னான்னா அவங்க லவ்வப் பத்தி யார் கிட்டயாவது சொல்லனும்னு கண்ணுல கொலை வெறியோடு அலைவாங்க. எவனாவது மாட்டினான்னு வச்சுக்கோங்க அவ்ளோ தான். அவள எப்போ மொதல்ல பார்த்தான் (கருமம்!!) அவ எப்போ இவன பார்த்து சிரிச்சா? (எழவு இது வேற) அவ க்ளாஸ்ஸுக்கு உள்ள போயிட்டு திரும்பி பாத்தது அப்படி இப்படின்னு ஒவ்வொன்னுக்கும் இவனே ஒரு காரணம் வச்சி நம்மல சாக அடிச்சிடுவான். இதுல அவ சிரிச்சா ரொம்ப அழகா இருப்பாடா, அவ கண்ணு ரொம்ப ஷார்ப் டான்னு சொல்லி இன்னும் கடுப்பேத்துவான்.
அப்புறமா அவனே கேட்டான், “மச்சான் என்னோட ஆளப்பத்தி என்னடா நெனைக்குற?”
உடனே நான், “அவ ஒரு…”
சொல்லி முடிப்பதற்குள் லொடுக்கு ஸிக்னல் கொடுத்தான்.
ஆப்படியெ ஆஃப் ஆனேன்.
பிறகு லொடுக்கு கேட்டான்,”அவளுக்கு என்னடா இப்போ?”
“மச்சான் அவ என்னோட அம்மா கிட்ட பேசியிருக்காடா தெரியுமா”, இது கானா பூனா.
லொடுக்கு: எப்போ டா?
கானா பூனா: அன்னிக்கு என்னொட போன்ல பேசுறப்போ அம்மா கிட்ட பேசினாடா
லொடுக்கு: ஓ போன்ல எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டிங்களா?
கானா பூனா: ஒரு மாஸமா தான்டா. (சொல்லிக் கிட்டே சுவத்துல இருந்த சுண்ணாம்ப சொரன்ட ஆரம்பிச்சான்).
வெக்கப்படுறாராம்!!!
(டேய் வேனாம்டா.ஓனர் திட்டுவான்டா)
பிறகு அவனே ரொம்ப ஃபீலிங்க்ஸோட சொன்னான், “டேய் நாளைக்கு பதினொரு மணிக்கு கேன்டீன் வர சொல்லி இருக்காடா”
அது வரை அமைதியா இருந்த சந்தானம் “டேய் நாளைக்கு ட்ரீட்டா டா மாப்ள” என்று கேட்டான்.
நம்ம பயலுக்கு வெக்கம் தாங்க முடியல. (போங்கடா நீங்களும் ஒங்க வெக்கமும். அது என்ன பசங்க வெக்கப்பட்டா ரொம்ப கேவலமா இருக்கு?)
அவன் பேசிக்கிட்டே போனான், ”அவள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா, நல்லா பேசுறாடா, எங்க பாத்தாலும் சிரிக்கிராடா, நாளைக்கு அவ என்ன நெனச்சாலும் பரவா இல்லடா, நான் கண்டிப்பா என்னோட லவ்வ சொல்ல போறேன்டா”.
சுவத்துல சுண்ணாம்பு கொறஞ்சு கிட்டே வந்தது.
“சரி நாளைக்கு பாக்கலாம்டா, நாளை மெகா ட்ரீட் ஒன்னு தர்றேன்டா, அவளுக்கு க்ரீட்டிங் வாங்கனும் டா” என்று சொல்லி கொண்டே கிளம்பினான்.
அது வரை அமைதியாக எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கருத்து அவன் போன பின்பு சீரியஸான குரலில் பேசினான்., “மச்சான் ஒன்கிட்ட ஒரு முக்கியமான மேட்டர் பேசனும்டா”
“எவன் ரிவிட்டு வாங்கப்போறான்னு தெரியலையே” மனசுக்குள்ள ஒரு அலார்ம் அடிச்சுது.
“மச்சான், மேட்டர் என்னன்னா, நம்ம கானா பூனாவோட சீனியர்ஸ் வந்து அவன் ஆள அவன் பேர சொல்லி கிண்டல் பண்ணியிருக்காங்க” கருத்து ரொம்ப சீரியஸான குரலில் எஃபெக்டோட பேசினான்.
நான்: அப்புறம் என்ன ஆச்சு
கருத்து: அவ ஹாஸ்டல்ல சொல்லி ஃபீல் பண்ணியிருக்காடா
நான்: என்ன சொல்லி
கருத்து: வேற என்னடா, எப்பவும் போல இவ ஃப்ரென்ட்லியா பழகினத நம்ம பையன் தப்பா நெனச்சுட்டானாம்.
நான்: இது எல்லாவளும் சொல்ற டயலாக் தானடா
கருத்து: நாளைக்கு அவ இந்த கிறுக்கு பயல கேன்ட்டீன் வர சொன்னதே இவ ஃப்ரென்ட்லியா மட்டும் தான் பழகுறா அப்படிங்கற உண்மைய சொல்லத் தானாம்.
நான்: நாசமா போச்சு, இவளுங்க இத ஒரு ஸ்டேன்டர்ட் டயலாக்காவே வச்சிருக்காளுகளாடா. பையன நல்லா சுத்த வுடுறது அப்புறமாஅ ஃப்ரென்ட்ஷிப் அது இதுன்னு டயலாக் வுடுறது கருமம் டா. சரி உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.
(நானா பேசினேனா அல்லது ஏற்கனவே நான் வாங்கின ரிவிட்டு பேச வச்சதான்னு தெரியலைங்கண்ணா)
லொடுக்கு: நம்ம லேடி கருத்து சொன்னாடா மாமு
(ரிவிட்டு உறுதி டா மாப்பு)
நான்: சரி நாளைக்கு என்னடா பண்ணலாம். இந்த நாயி வேற க்ரீட்டிங்க் அது இதுன்னு கண்ணுல வெறியோட அலையிறான்டா.
கருத்து: (பயங்கர சீரியஸான குரலில்) மாமா நாளைக்கு எதாவது பண்ணனும்டா. இவன் ரொம்ப சின்சியரா இருக்கான். அவ எதாவது நெகட்டிவா பேசினா அவ்ளோ தான், இவன் ரொம்ப வெக்ஸ் ஆயிடுவான்டா. ஏதாவது தப்பான டெசிஷன் எடுக்க மாட்டான்னு என்ன நிச்சயம்டா.
(நாயி உக்காந்து யோசிப்பானோ? மூச்சு விடாம பேசுறான்டா)
நான்: டேய் எனக்கும் ஒரு மாதிரி இருக்குடா, அவன் ரொம்ப சென்ஸிட்டிவ்டா. பாரு. சுவத்துல பாதி சுண்ணாம்ப காணோம்டா.
லொடுக்கு: டேய் மாம்ஸ் சீரியஸா பேசுடா, நாளைக்கு என்ன பண்ண.
அன்னிக்கு நைட் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி நாளை காலைல கானா பூனா கேன்டீன் போகும் போது அவன் கூட யாராவது தெளிவான பையன அனுப்பி வைக்கனும்.
கேன்டீன்ல அவங்க ரெண்டு பேரும் பேசும் போது ரெண்டு சைட் டேபிள்ளையும் நம்ம பசங்க இருக்கனும். அவங்க ரெண்டு பேரும் கேன்டீன் போறதுக்கு முன்பே ரெண்டு பசங்கள அனுப்பி இருக்க வைக்கனும்.
கேன்டீனுக்கு எதிரில் இருக்கின்ற மரத்துல ரெண்டு பசங்க இருக்கனும். இவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் டென்ஷன் ஆகி கத்தினாலும் நம்ம பசங்க அவன தனியா தள்ளிகிட்டு எலெக்ட்ரிகல் டிப்பார்ட்மென்ட்க்கு வந்துடனும்.
அன்பு நன்பன் சப்பாத்தி தான் சரியான ஆளு. அவன முதல்லயே கேன்டீன்ல இருக்க வச்சிரலாம். இவன் அவ கூட பேசப் போறப்ப நம்ம நன்பர் விசுவாசராஜன் துனைக்கு இருப்பார்.
கருத்துவின் திட்டம் ஓரளவு நல்லாத்தான் இருந்தது. மறுநாள் காலையில் கானா பூனாவுக்கு தெரியாமல் விசுவாசராஜனுக்கும் சப்பாத்திக்கும் உண்மை சொல்லப்பட்டது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவாக விளக்கப்பட்டது.
மணி பதினொன்று. சந்தானம் கேன்டீனுக்கு வெளியில் நிறுத்தப்பட்டான். சப்பாத்தி உள்ளே ஒரு கோக் பாட்டில வாங்கி கால் மணி நேரமாக உறிஞ்சிக்கொண்டிருந்தான். கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து அவள் வெளியே வந்து கேன்டீன் நோக்கி நடந்தாள். விசுவாசம் மற்றும் கானா பூனா கேன்டீனை நெருங்கி விட்டனர்
நான் எப்பவும் போல என்னோட டிப்பார்ட்மென்ட்டில் உள்ள படிக்கட்டில் உக்காந்து மானாவாரியாக ஸைட் அடித்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு பக்கத்தில் லொடுக்கு. கருத்து குட்டி போட்ட ஏதோ ஒன்றை போல அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். லொடுக்கு கேட்டான், ”மாம்ஸ், லவ்வ சொல்லப் போறவனே ஒழுங்கா இருக்கான் இந்த நாயி ஏன்டா டென்ஷன் ஆவுது”.
நான்,” விடுறா”
அவள் மெதுவாக கேன்டீனுக்குள் சென்றாள். இவனும் உள்ளே போனான்.
விசுவாசராஜன் வாசலில் நின்று கொண்டான்.
எல்லாரும் ஒரு வித டென்ஷனில் இருந்தோம். இவன் காதலை சொல்லுவான், அவ எப்பவும் போல “நான் ஒன்ன என்னோட ஃப்ரென்டா தான் நெனச்சேன்” என்று சொல்லுவாள், இந்தப் பய மனசொடைஞ்சு போயிடுவான். அடுத்து என்ன ஆகும்??
ஒரு ஆறு நிமிஷம் ஆச்சு. அவள் மட்டும் வெளியே வந்தாள். எங்களுக்கு பயங்கர டென்ஷன். அவளோட முகம் வேற ரொம்ப கூலா இருக்கே. பொன்னுங்களுக்கு பசங்க மனச ஒடச்சா ஒரு திருப்தி தான் இல்லையா?
கருத்து லைவ் கமென்டரி கொடுத்தான். “மாம்ஸ் இப்போ பாரு, அவன நம்ம பசங்க தோளுல சாய வச்சு கூப்பிட்டு வருவானுங்க, அவன நம்ம தான்டா சமாதானப்படுத்தனும்”
கருத்து சொன்னது சரி தான். கேன்டீனுக்கு வெலியெ விசுவாசராஜனும் கானா பூனாவும் வந்தார்கள். ஆனால்....
விசுவாசராஜன் முகம் சரியில்லை. பயங்கர டென்ஷன். ஆனால் கானா பூனா முகம் ரொம்ப கூலா இருக்கே என்ன கொடுமை டா இது.
ரெண்டு பேரும் எங்க பக்கம் திரும்பி கூட பாக்கலை. ஆனால் விசுவாசராஜன் முகம் வெளிறி இருந்தது. கிட்டத்தட்ட அரை மயக்கத்தில் இருந்தான்.
எங்களுக்கு ஒரே குழப்பம். சப்ப்பாத்தி எங்கே?
மூன்று பேரும் கேன்டீனுக்கு போனொம். உள்ளே பார்த்தால் சப்பாத்தி அரை மயக்கத்தில் இருந்தான்.
என்னடா இது அவனை தவிர எல்லாரும் நொந்து போயிருக்கானுங்க என்ன நடந்தது.
ஓரு சோடா வாங்கி சப்பாத்தி முகத்தில் அடித்தோம்.
சப்பாத்தி ஸ்லோ மோஷன்-இல் கண்ணு முழிச்சான்.
நடந்ததை சப்பாத்தி சொன்னான்.
“மச்சான் அவ உள்ளே வந்து இவன பாத்து தனியா வேற டேபிளுக்கு கூப்பிட்டா டா. இவனும் போனான்டா. “
நாங்கள்: அப்புறம் என்னடா ஆச்சு?
சப்பாத்தி ஃப்ளாஷ் பேக் போனான்.
அவள்: நான் ஒன்கிட்ட முக்கியமான ஒரு மேட்டர் பேசனும்டா
அவன்: நானும் தான்டா
அவள்: நானே முதல்ல சொல்றேன்டா
ஆவன்: சரிடா
அவள் நம்ம ரெண்டு பேரும் எவ்ளோ நல்லா ஃப்ரென்ட்லியா பழகுறோம்டா? (அடிப் பாவி)
அவன்: ஆமா
அவள்: உன்னோட சீனியர்ஸ் என்னைய கின்டல் பன்னுறாங்கடா
அவன்: என்ன கின்டல் பன்னுறாங்க
அவள்: நீ என்ன லவ் பன்னுறியாம்டா, நம்ம நட்ப கொச்சைப்படுத்துராங்கடா (அடி நாய வாயில நல்லா வரும்)
அவன்: யார் அப்படி சொன்னது சீனியர்ன்னா பெரிய இவங்களா? நம்ம ஃப்ரென்ட்ஷிப்ப கேவலப்படுத்துவாங்களா என்ன.
(அட நாயி நேத்து என்ன டயலாக் வுட்டான்டா)
அவன்: நீ கவலைப்படாதே டா . நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன்டா (அந்த க்ரீட்டிங் என்னடா ஆச்சு)
அவள்: டேய் நீ அவங்க கூட சண்டை எல்லாம் போடாதடா. (ஒன்னோட மூஞ்சிக்கு சண்டை வேற போடனுமா)
அவன்: நீ கவலைய விடுடா. நான் பாத்துக்கிறேன்டா. (டேய் அடங்குங்கடா)
இவ்ளோ தான்டா பேசினாங்க. அப்புறம் ரெண்டு பேரும் ஹேன்ட் ஷேக் பன்னிட்டு போயிட்டாங்கடா. விசுவாசம் இங்கேயே மயங்கி விழுந்துட்டான்டா. நான் அரை மயக்கத்தில் இருந்தப்ப தான் நீங்க வந்தீங்கடா.
இதையெல்லாம் சொல்லும் போதே சப்பாத்தி மறுபடியும் மயக்கம் அடைந்தான்.
நானும் லொடுக்குவும் கருத்துவை முறைத்துப் பார்த்தோம். அவன் மெதுவாக நழுவினான். லொடுக்கு காலில் இருந்த செருப்பை எடுத்தான்.
நான் லொடுக்கு கிட்ட கேட்டேன் “எதுக்குடா செருப்பு? நல்லா பழகிட்டு ஃப்ரென்ட்னு சொன்னாலே அவளுக்கா இல்ல நேத்து வரைக்கும் அவள லவ் பன்னுறதா சொல்லிட்டு இன்னிக்கு உயிர் தோழின்னு வெக்கமே இல்லாம பல்டி அடிச்சானே அவனுக்கா?”
லொடுக்கு: இல்ல மாமா, இந்த நாயிங்க மேட்டர்ல தலைய உட்டோம் பாரு நம்ம ரெண்டு பெரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கலாம்டா.
நானும் லொடுக்குவும் சப்பாத்தியை கைத்தாங்கலாக வெளியெ கூப்பிட்டு வந்தோம்.
6 comments:
endaa...
oru sappa matterukku enda ivvalavu buildappu? un friend lodukku"kku", "sorinaai pudukku"nnu(itch dog seeds) peyar vacchha poruththama irukkum. onakku mattum kooru romba jaasthiyaakkum? adutthhu karuthu kandasaamy, eppidi? etha ethukkulla viduvaan? un sorts'ukkulla kaandamirugaththa(one horned kaaziranga rhino) vittaalum moochchu thenari seththu poyirum.. nee aduththavana???? aduthu santhana kumar... nee mattum daily college poiruviyaakkum? dai naarappayale(foul smelling brute) evanum evalaiyum love pannittu poraan... unakku edhukkudaa vaiththerichal(stomach burns)??? athu endaa friend daaav adikkura figure mattum unga kannukku karumaandirama theriyuthu? unakku kidaikkaliye appidingara vaiththerichalaa? un kanavula eththanai naal aval un kaamappasikku(lust hunger) virundhaayi un jattiya nanaichchiruppaa(oh sorry, nee than collegeukkum jatti pottu varamaattiye...) ivvalaththiyum manasula vachikkittu enda vekkame illama dochu figureunnu muthirai kuththireenga?? oruththanoda love darr aayittunnaa ungalukku ellam evvalavu santhosam??? ithukku nee pichaikkaaranukku "k@n@@" kuduththu polaikkalam. endaa suvaththula sunnaamba(calcium) soranduna unakku avvalavu feelings varudhaa? adhaan daily nightla tharaiyila kuppura paduthu paaiya(mat) kilichu oru kumbaa(cup) sunnaambu adikkureengale, adhu endha kanakku(which maths)?? ngoyyala rendu deptment sernthu ennamo sathi thittam theetra alavukku enda buidup? ponnungaluuku aangal manasa odachchaa avangalukku thirupthiyaa?? appo pasangalukku pengagaloda "etha" odachchaa thirupthi? visuvaasan enbadhu andha tharkuri thadiyan thaane? dai aana onnu... intha gruop'la eavan kaila sikkunaalum veratti veratti vettuvendaa... unga story a poi padichen paaru,
ithukku "vengambayalugalin vetti sariththiram"nu peyaru vai, pongadaa vetti p**daigalaa?
by,
padmashri.maanasthan(pride man).
CEO - BPMPVVVV sangam
(blog'ungara perla mokka podura vengambayalugala veratti veratti vettugira sangam)
govt of India approved,
non profit organisation,
no branches outside chennai,
litigation entertained only in chennai high court,
membership fee - just RS 100 or us$ 2.5 or 2 uk poundsterling,
Donations accepted,
lifetime members-Anand, paandi.
website:www.maanasthan.com
email:maanasthan@yahoo.com

keep it up man,
ordinary theme, but extra-ordinary script writing. good, you can elaborate still more .you can characterise your friends still more. very good clarity in language, especially that south tamilnadu slang. this title is the most suitable title i think so. the nick name "kaana punaa"-excellent. the plot is original, the characters are natural, the script is gradual, the slang is sensational, above all every thing enjoyable.though your blog is lengthy,it sustains the interest till the end. love to read more of your blogs man. i do expect more of your life incidents find a place in the blogosphere. lets see how you continue your tempo.

Dai Anonymous naaye! Caartoon paathu kaiyyadichcha naayi nee pesuriyaaa? Onnoda figuru peru ennadaaa? Oliveoil - illaiyaaaa? Dey intha olagaththulaye caartoon-la varra oru figura nenachchu kaiyyadicha ore karumaandhiram pudichcha naayi neeyaaththaandaaa iruppa.
Dai! unmaiya solludaa! Nee college hostel-la iruntha pothu Kuchchiboy -yoda shorts-a-thirudi jattiyaa pottukittu alaintha porampokku thaane! Yeppudiraa ippadi vekkameyillaama anonymous(e) veshaththula vanthu comment adikka manachu varuthu. mavae onnoda sangaththula rendu life-time members peru sonna paaru atha thaandaa ennaala thaanga mudiyala. onnap paththiyum onnoda sangaththappaththiyum chila unmaikalai appuram solren.
ippadikku
ANTI - BPMPVVVV sangam - Squad
thiruththam 1:
Nee college'la daav adichcha figure'oda, olive oil evvalavo better.
thiruththam 2:
Kuchibaai thaan ennoda jattiya avan sorts'aa use pannikittaan.
thiruththam 3:
Anonymous veshathile varradhukku manasu vendam, dhil irundhaa podhum.
thiruththam 4:
ennoda sangaththaiyo, members'aiyo unnala onnum pannamudiyaathu, because sangaththa kalaichu 10 nimisham(min) thaan aaguthu.
Post a Comment