கழுகுத் தொலைக் காட்சியின் "ஆவியின் வழக்கறிஞன்" நிகழ்ச்சி பற்றி ஒரு சின்ன அறிமுகம். இது கொஞ்சம் ஏறுக்கு மாறான நிகழ்ச்சி
ஏனென்றால் இதில் நமது நிருபர் கழுகுக்கு ஆவி பிடித்து விடும். நம்முடைய புலனாய்வு நிருபர் லொடுக்கு அந்த ஆவியிடம் பேட்டி எடுப்பார்.
சரி இன்றைய நிகழ்ச்சிக்கு போகலாமா?
லொடுக்கு பேசுகிறார்:
வணக்கம் நேயர்களே
இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வரும் ஆவி நமது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. முகர்ஜி:
லொடுக்கு: வணக்கம் முகர்ஜி அவர்களே,
கழுகு: வணக்கம் தம்பி.
லொடுக்கு: (தன்னை மறந்து) டேய் மாமா என்னடா குரல் மாறிப் போயிருக்கு?
கழுகு: என்ன தம்பி நான் ஒரு அமைச்சர் இப்படி மரியாதை இல்லாம பேசுறீங்க
லொ: சாரி நீங்க ஆவி-ன்னு மறந்துடுச்சு. ஓ.கே நிகழ்ச்சிக்கு போகலாம்.
லொ:ஐயா முதல்ல நம்ம நாட்டோட அயல் நாட்டுக் கொள்கைய பத்தி சொல்லுங்க
அ: நம்முடைய பெருந் தலைவர்க்ளான நேரு, அன்னை இந்திர ஆகியோர் ஒரு மிகச் சிறந்த அயல் நாட்டுக் கொள்கையை நமக்குத் தந்திருக்கிறார்கள். அதைத் தான் இந்த அரசும் பின்பற்றுகிறது.
லொ: கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்.
அ: நம்முடைய அயல் நாட்டுக் கொள்கை எந்த நாட்டையும் சார்ந்தது அல்ல. எந்த ஒரு நாட்டுடனும் நாம் அணி சேர்ந்து இன்னொரு நாட்டை எதிர்க்க மாட்டோம். எந்த ஒரு சர்வ தேசப் பிரச்சினையயும் நாம் சுயமாகவே முடிவெடுப்போம். வேறு எந்த நாட்டின் நிர்ப்பந்ததுக்கும் அடி பணிய மாட்டோம்.
லொ:(பொதுக் கூட்டத்துல பேசுற மாதிரி ரொம்ப நீளமா பேசுறாரு) ஐயா, அப்போ ஈரானுக்கு எதிரா சர்வ தேச அனு சக்திக் கழகத்துல நாம போட்ட வோட்டு நாமளா எடுத்த முடிவு தானா?
அ:நிச்சயமாக அது நாம எடுத்த சொந்த முடிவு தான்.
லொ: ஐயா ஈரான் ரொம்ப வருஷமா நம்மோட நட்பு நாடு. இப்பவும் நம்மோட எண்ணெய்த் தேவைக்கு நமக்கு ஈரான் தர்ற ஆயில் ரொம்ப முக்கியம். அது மட்டுமில்லாம ஈரான் நம்மோட அணு ஆராய்ச்சி விவகாரத்திலேயோ, நம்மோட காஷ்மீர் விஷயத்துலயோ நம்மோட பிரச்சினை செய்தது கிடையாது. அதுக்கும் மேலா ஈரானோட அனு ஆராய்ச்சி இந்தியாவ எந்த விதத்துலேயும் பாதிக்கப் போறது இல்லை. அப்ப்டி இருக்கறப்போ அந்த வோட்டுப் போட என்ன அவசியம். ஒரு அரசியல்வாதியாவோ அமைச்சராவோ பதில் சொல்லாம ஒரு ஆவியா மனசாட்சியோட பதில் சொல்லுங்க.
அ: சரி, ஒரு அமைச்சரா என்னோட பதில் உனக்குத் தெரியும் "நாட்டுக்கு அருகில் இன்னொரு அனுசக்தி நாடு உருவாகுவதை நம் நாடு விரும்பவில்லை". ஒரு ஆவியா என்னோட உண்மையான பதில், "அமெரிக்காக் காரன் இம்சை பண்ணுறான் தம்பி. ஈரானுக்கு எதிரா வோட்டுப் போட்டாத்தான் அனு சக்தி ஒப்பந்தம் நிறைவேரும்னு கண்டிப்பா சொல்லிட்டான் தம்பி".
நைட்டு ஒரு மணிக்கு தூங்குறவன போன் பண்ணி எழுப்பி கண்டிப்பா வோட்டுப் போடுவீங்கதானேன்னு கேட்டு சாகடிக்கிறான். நானும் எவ்ளோ தான் சமாளிக்குரது நீயே சொல்லு"
(அவருடைய குரலில் வருத்தம் இருந்தது)
லொ: சரி அத விடுங்க சார். இவ்ளோ நாளா நம்மள துளி கூட மதிக்காத அமெரிக்கா அவங்களாவே நம்மளக் கூப்பிட்டு இந்தியா அனு சக்தித் துறையில் உயர்ந்த தொழில்நுட்பங்கள் கொண்ட நாடு அப்பிடி இப்பிடின்னு கதைய விட்டு, நம்ம பிரதமருக்கு அவார்டு எல்லாம் குடுத்து நம்ம தான் வருங்கால வல்லரசு-ன்னு கப்சா எல்லாம் அடிச்சு இந்தியாவுக்கு அணு சக்தித் தொழில் நுட்பமும், அணு உலை போன்ற உயர் தொழில்நுட்பக் கருவிகளும், யுரேனியம் எரிபொருளும் நாங்க குடுத்தே தீருவோம். இதற்காக அமெரிக்க சட்டதிலேயும் மாற்றம் கொண்டு வருவோம். தேவைப்பட்டால் யுரேனியம் சப்ளை செய்யும் நாடுகளுடன் பேசி இந்தியாவுக்கு எரிபொருள் வாங்கித் தருவோம்-ன்னு கண்ணுல கொலை வெறியோட ஜார்ஜ் புஷ் பேசினாரே அதப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க?
அ: தம்பி, நாம தான் அடுத்த வல்லரசுங்கற விஷயம் அமெரிக்கா ஒத்துக் கிட்டது ரொம்ப சந்தோஷமான விஷயம். அது மட்டுமில்லாம நாம அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு பொறுப்பான நாடு. நம்மை ஒரு அணு ஆற்றல் வல்லன்மை கொண்ட நாடாக உலகம் அங்கீகரித்து விட்டதன் அடையாளம் தான் இந்த ஒப்பந்தம். அதனால் தான் அவர்களே வலிய வந்து இந்த ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இதற்கு முன்பு நம்முடன் எந்த நாடும் அணு சக்தி விஷயத்தில் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதுன்னு சொன்னதால நம்மோட அணு உலைகல் யுரேனியம் இல்லாம மூட வேண்டிய நிலை வந்தது. இப்போது அவர்களே ஒப்பந்தம் போடுவதால் ரஷ்யா ஃப்ரான்ஸ் போன்ற நமது நட்பு நாடுகளிடம் நாம் அணு மின்சாரத்திற்கு தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
லொ: (மிகவும் கூலாக..) சரி சரி. அமைச்சரா பதில் சொன்னது போதும், மனசாட்சியுள்ள ஆவியா இப்போ பதில் சொல்லுங்க.
அ: (ஒரு பெரு மூச்சுடன்...) தம்பி நம்ம கிட்ட ஒரு கெட்ட பழக்கம் உண்டுப்பா. நம்மளப் பார்த்து யாராவது அடுத்த வல்லரசு நீ தான்யா அப்படீன்னு சொல்லிட்டான்னு வச்சுக்கோங்களேன், அவனுக்காக நாம மட்டையா மடங்கிடுவோம்ப்பா என்னன்னாலும் செய்வோம்ப்பா. ஒரு உதாரணம் சொல்லுறேன். 2002-ல சுனாமி வந்து நம்ம நாட்டுல நெறைய பேரு பாதிக்கப்பட்டாங்க இல்லையா. அப்போ கூட நமக்குத் தான் சேதம் அதிகம். ஆனாலும் நாம பெரிய ஆளுக-ன்னு காட்டுறதுக்காக நாம பாதிக்கப் பட்ட பக்கத்து நாட்டுக்கு உடனே நம்மோட நேவி கப்பல அனுப்பினோம். பாதிக்கப்பட்டவன் எந்த நாடா இருந்தாலும் உதவி செய்வது தப்பில்லை. ஆனா நம்மோட மக்கள் அதிகமா கஷ்டப் படும் போது அதுக்குத் தான் எல்லா உதவியும் பண்ணனும். அத விட்டுட்டு நம்ம மக்களோட வரிப்பணத்துல அழுகிற நம்ம மக்கள விட அடுத்தவனுக்கு குடுத்து வல்லரசுன்னு காட்டுற ஆளுங்க தான்ப்பா நாம. இந்த வீக்னெஸ் எப்படியோ அமெரிக்காவுக்கு தெரிஞ்சு போச்சு. அதான் அவன் நம்மள நல்லா ஏத்தி வுட்டுட்டு, நம்ம பிரதமரக் கூப்புட்டு போய் அவார்ட் எல்லாம் குடுத்து கவுத்திப் புட்டாங்கப்பா. நமக்கு அங்க கெடச்ச மரியாதை எல்லாம் பாக்கும் போது ஆட்டக் குளிப்பாட்டி, மாலை போட்டு, அலங்காரம் பண்ணி குனியச் சொன்ன மாதிரியே ஒரு ஃபீலிங் தம்பி...
சரி மேட்டருக்கு வர்றேன். அவிங்க நம்ம கூட அணு ஒப்பந்தம் போட்டதுக்கு முக்கிய காரணம், நம்ம மேல பாசம் எல்லாம் கெடயாது. அவிங்க நாட்டுல உள்ள அணு சக்திக் கருவிகள் தயாரிக்குற நிறுவனங்களுக்கு அவிங்களோட ப்ராடக்ட் எல்லாம் விக்கிறதுக்கு ஒரு கஸ்டமர் வேனும். நம்மோட எதிர்காலத் திட்டப்படி அணு சக்தி மூலமாத் தான் இன்னொரு 20000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப் போறொம்ங்கிறது ஊருக்கே தெரியும். இந்த வாய்ப்ப அமெரிக்கன் கம்பெனிகள் எல்லாம் பயன்படுத்டுறதுக்காகத் தான் இந்த ஒப்பந்தம். இத வச்சு அமெரிக்காவுக்கு நாலு போனஸ் தம்பி. 1. ஈரான் கூட நாம போடவிருந்த பைப் லைன் திட்டத்தைக் கிட்டத்தட்ட முடக்கிட்டாங்க. 2. அமெரிக்காவுக்கு ஜூனியர் பார்ட்னரா அல்லது ஒரு அடியாளா சைனாவ இந்தப் பகுதியில எதிர்க்க நாம யூஸ் ஆயிட்டோம்.
3. கூடிய சீக்கிரம் அமெரிக்காவுல நடக்கப் போற அதிபர் தேர்தல்ல புஷ் இத சாக்கா வச்சு இந்தியர்களோட வோட்டக் கவர் பண்ணிடுவாரு.
4. நம்மளோட அணு மின்சார நிலயங்களை சர்வ தேச அணு சக்திக் கழகத்தின் ஆய்வுக்கு அனுமதிக்க வைத்தது. (இந்த ஒப்பந்தம் ரத்து ஆனால் கூட அவர்கள் ஆய்வு தொடர்ந்து இருக்கும்)
கொஞ்சம் தண்ணி குடுங்க தம்பி.
அப்போது ஒரு தட்டில் ரெண்டு கப் தண்ணிய எடுத்துக்கிட்டு கழுகு TVயில வேலை பார்க்கிற ஒரு சேலை கட்டிய பொண்ணு எடுத்துக் கொண்டு வர, அவளை "குஷி ஜோதிகா" போர்ஷனில் பார்த்த லொடுக்கு அமைச்சரிடம் "சார், பெண்கள் இடைத் தேர்தலில் 24 இன்ச் இட ஒதுக்கீடு தர்றது பத்தி என்ன நெனைக்கிறீங்க" என்று உளர,
கன்ட்ரோல் ரூமில் இருந்த நிகழ்ச்சி இயக்குனர் சப்பாத்தி கேமரா வை நிறுத்தினான்.
பின்பு அஙிருந்த குயிலிடம் "டேய் லொடுக்கு இருக்கும் போது தண்ணி குடுக்க எதுக்குடா அந்தப் புள்ளைய அனுப்பின. இப்போ பாரு அந்த நாயி அவளோட இடுப்பு சைஸ வச்சு இட ஒதுக்கீடு லெவல்ல பேசுறான். 33 சதவீத இட ஒதுக்கீட்ட 24 இன்ச்சா மாத்திட்டான்."
"டேய் ஆனந்த் மாடசாமி, இந்த வார எபிசோட் இத்தோட முடிஞ்சுது. அடுத்த எபிசோட் அடுத்த வாரம்ன்னு நிகழ்ச்சிய முடிச்சுடு டா"
மீதமுள்ள பேட்டிய அடுத்த வாரம் பார்க்கலாம் நேயர்களே..
அதிராவின் தந்தையாகிய நான் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்...
Friday, November 23, 2007
Tuesday, November 6, 2007
பேரழிவு ஆயுதம் - 2 (Weapon of Mass Destruction. Part -2)
நான் கல்லூரியை வளாகத்தை விட்டு வெளியே வந்தேன். கேட்டைக் கடக்கும் போது சப்பாத்தி வந்தான். அவனிடம் லொடுக்கு எங்கே என்று கேட்டேன்.
என் முகத்தில் இருந்த சீரியஸ்னெஸ்ஸைப் புரிந்து கொண்ட சப்பாத்தி "என்ன விஷயம்டா " என்றான்.
"அவன் ஏதோ பொருளு வைச்சிருக்கானாமே?" என்றேன்.
"தெரியலையே மச்சான், அவன் வேன் ஸ்டாண்ட்-ல தான்டா இருக்கான் வா போயி பாக்கலாம்" என்றான்.
வேன் ஸ்டாண்ட் கல்லூரியிலிருந்து கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர். சரி நடந்தே போகலாம் என்று வெயிலில் நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியில் மாமா கடை அருகே நன்பன் மாவீரன் "அலறல்" காளி வந்தான்.
"மச்சான் ஒனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?" என்று லொல்லுசபா மனோகர் ஸ்டைலில் கேட்டான்.
"என்னடா மேட்டர்" இது சப்பாத்தி.
"மச்சான் ஒனக்கு மட்டும் சொல்றேன் வேர யாருக்கும் சொல்லாதே"
"சொல்ல மாட்டேன்டா என்ன மேட்டர்"
"மச்சான் லொடுக்கு ஏதோ வெயிட்டா ஆயுதம் வச்சிருக்கானாம்டா"
"எதுக்குடா" இது சப்பாத்தி.
"ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க அவன அடிக்க ஸ்கெச் போட்டாங்களாம்டா, அவனுங்கள எதுத்து நிக்க மாப்ள முடிவு பண்ணிட்டாராம்டா"
"உனக்கு யாரு சொன்னா?"
"நம்ம லொடுக்கு தான் சொன்னான் மச்சான்"
(இவன் ரௌடின்னு இவனே எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு அலையுறானா கெரகம் புடிச்ச பய)
"சரி அவன் இப்போ எங்கே இருக்கான்டா" இது நான்.
"மச்சான் அவன் வேன் ஸ்டாண்ட்-ல தான்டா இருக்கான், அப்புறம் இன்னொரு மேட்டர்டா" இதை சற்று குரலை தாழ்த்திச் சொன்னான்.
"என்ன மேட்டர்"
"மச்சான் ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க இன்னிக்கு காலையில இந்தப் பக்கமா பைக்ல வந்தாங்களாம்டா, அவங்க லொடுக்கத் தான் தேடி வந்திருப்பாங்கன்னு நெனைக்றன்டா"
"அத வுடுறா மாப்ள, வந்தா பாத்துக்கலாம்"
நான் சப்பாத்தியிடம் சொன்னேன், "பயபுள்ள நல்ல புத்திசாலிடா மாப்ள, எல்லாவங்கிட்டேயும் "சாமான்" கொண்டு வந்த மேட்டர சொன்னதோட இல்லாம அவனுங்க கிட்டயே "வேற யாரு கிட்டயும் சொல்லாதே-ன்னு சொல்லி அனுப்பியிருக்கான் பாரு, அங்க தான்டா பையன் நிக்குறான். நம்ம பசங்க யாரு கிட்டயும் சொல்லாதேன்னு சொன்னாத் தான் கண்டிப்பா சொல்லுவாங்க-ன்னு பய புள்ளைக்கு தெரிஞ்சிருக்குடா"
நாங்கள் நேரே வேன் ஸ்டாண்ட்க்குப் போனோம்.
அங்கே குமாருடைய வேன் எங்கே என்று தேடினோம்.
கிடைத்து விட்டது.
வேன் கதவை திறந்தோம். உள்ளே லொடுக்கு சட்டையில்லாமல் பின் சீட்டில் படுத்துக் கிடந்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தோம். எங்கேயும் எந்த பொருளும் இல்லை.
கத்தி, அரிவாள், வாள் என்று எதுவுமே இல்லை.
உள்ளே முழித்துக் கொண்டிருந்த குயில் எங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்னடா தேடுறீங்க"
"இல்ல குயிலு, லொடுக்கு ஏதோ சாமான் வச்சிருக்கான்னு ஊரு முழுக்க அவனே பரப்பிக்கிட்டு இருக்கான். அதத்தான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தோம்டா"
"அவன நாலு மிதி மிதிச்சு எழுப்பிக் கேளு சொல்லுவான்" இது குயில்.
நாங்கள் அவன் சொன்னபடியே செய்தோம்.
லொடுக்கு எழுந்தான்.
"என்ன மாமா"
"டேய் ஏதோ பெரிய ஆயுதம் வச்சிருக்கியாமே, பசங்க சொன்னங்க"
"மாமா ஒனக்கும் கூட தெரிஞ்சு போச்சா. நீ வேற யாரு கிட்டயும் சொல்லிடாதே."
(நாதாரி, நம்ம கிட்டயும் பிட்டப் போடுது பாரு)
"இதுக்கு மேல ப்ரின்சிபலுக்கு மட்டும் தான்டா தெரியனும். மத்த எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு"
"சரி அந்த ஆயுதத்த எங்கே"
லொடுக்கு நிதானமாய் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டான்.
"என்னடா இது பேன்ட்டில் வச்சிருக்கான், ஒரு வேளை "உருண்டை"யாக இருக்குமோ"
(பி.கு: உருண்டை என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நாட்டு வெடிகுண்டு)
கையை வெளியே எடுத்தான்.
அட இது ஜெபமாலை ஆச்சே!
"டேய் இத கழுத்துல தானடா மாட்டுவாங்க, நீ ஏன்டா பாக்கெட்ல வச்சிருக்க"
"இல்ல மாமா சண்ட போடறப்போ அறுந்துடும் இல்லையா"
(எப்புடிறா இப்படி வெக்கமே இல்லாம, மனசாட்சிய கழட்டி வச்சிட்டு பேசறீங்க)
"ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க இத அடையாளமா வச்சு தான் ஒன்னத் தேடுறாங்கன்னு யாரோ சொன்னாங்கப்பா"
"மாமா எவனுக்கும் நான் பயப்பட வேண்டியதில்லை. நான் என்னோட ஆயுதத்தை வச்சு எத்தனை பேரு வந்தாலும் அடிப்பேன் மாமா"
மறுபடியும் பாக்கெட்டுக்குள்ள கைய வுட்டான்.
"ஒரு வேளை நாட்டுத் துப்பாக்கியா இருக்குமோ?"
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதை வெளியே எடுத்தான்.
நானும் சப்பாத்தியும் ஒரு சேர அதிர்ந்து போனோம். அவன் கையில் சின்னதா ஏதோ எல்லிப்ஸ் ஷேப்பில் ஒரு துருப்பிடிச்ச இரும்பு ரிங்க். அதோட ஒரு ஸைடில் நாலு ஸ்பைக் கூர்மையாக??? இருந்தது.
"டேய் என்னடா இது?"
அவன் பெருமையா சொன்னான், "என்னோட தெருவுல ஒரு ரௌடி உன்டு. எனக்கு நல்ல ஃப்ரென்ட். அவன் தான் கொடுத்தான்"
பின் அவனே டெமோ குடுத்தான்.
(கருமம் இதுக்கு டெமோ ஒரு கேடா)
"மச்சான், நல்லாப் பாரு. இத இப்படிக் கையில சொறுகிக்கனும்."
(டேய் நிப்பாட்டு டா)
"அப்புறம் உள்ளங்கைய மூடிக்கோ. இப்பொ இந்த நாலு ஷார்ப் ஸ்பைக் இருக்கு பாரு இது கரெக்டா உன்னோட புறங்கையில ஃபிட் ஆயிடும்."
(ஒனக்கு ஈவு இரக்கமே கிடையாதா நிறுத்து டா)
"யாரு வந்தாலும் ஒரே குத்து. அவனோட மூஞ்சி கிழிஞ்சிடும்"
(யாராவது வந்து காப்பாத்துங்களேன். அய்யோ கொல்றானே.)
சப்பாத்தி நிஜமாவே டென்ஷனாயிட்டான்.
"டேய் இது தான் ஒன்னோட பேரழிவு ஆயுதமா? இத வச்சுத் தான் நீ பத்து பேரன்னாலும் அடிப்பியா?"
"ஏன் இதுக்கு என்னடா குறை"
"டேய் அந்த பசங்க வச்சிருக்கிற அரிவாள் ரேஞ்சுக்குப் பாத்தா பக்கத்து வேன்ல உக்காந்துகிட்டே இந்த வேன்ல இருக்கிறவன வெட்டுவானுங்க. நீ என்னடான்னா இந்த மொண்ணை ரிங்க வச்சிக்கிட்டு பத்து பேர அடிப்பேன், இருபது பேர கடிப்பேன்னு பில்டப் குடுத்துக்கிட்டு இருக்க. இந்த வேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு?"
லொடுக்கு அசராமல் பதில் பேசினான், "சப்பாத்தி, கையில இருக்கிற ஆயுதம் முக்கியம் இல்லைடா. மனசில இருக்கிற தில் தான்டா முக்கியம்"
(என்னமா பேசுறான்டா ங்ஙொய்யால, இதுக்கு தான்டா இவனுக்கு நெறைய ஃபிகருங்க சிக்குது)
நான் சொன்னேன், "டேய் தயவு செஞ்கு இந்த மாதிரி "பயங்கரமான ஆயுதம்" எல்லாம் காலேஜுக்கு கொண்டு வராதேடா"
"நீ கொண்டு வந்த அந்த மொண்ணை துருப் பிடிச்ச இரும்பக் கூட மன்னிச்சிரலாம், ஆனா இதுக்கு நீ குடுத்த பில்டப் இருக்கு பாரு, அது தாங்க முடியல"
உடனே லொடுக்கு, "மாமா, நீ சொல்லுறதால நான் இனிமேல் இந்த ஆயுதத்தை பயன்படுத்த மாட்டேன்"
அவனுடைய "ஆயுதத்தை" ஒரு ஃபீலிங்கோட பாத்துக்கிட்டே உள்ளே வச்சான்.
(ஆமா, இல்லாட்டி இவரு இருபது பேர போட்டு தள்ளிட்டு தான் மறு வேலை பாப்பாரு, நாயி ஓவராப் பேசுறான்டா)
"டேய் எடத்த மாத்தி வையிடா ஏற்கனவே துருப் பிடிச்சு இருக்கு. படக் கூடாத எடத்துல பட்டு செப்டிக் ஆயிடப் போகுது"
அவனுடைய கையில் இருந்த ஜெபமாலை அவனைப் பாத்து நக்கலாகச் சிரித்தது..

Saturday, November 3, 2007
பேரழிவு ஆயுதம் - 1 (Weapon of Mass Destruction. Part -1)
இது எங்கள் கல்லூரி இறுதி ஆண்டில் நடந்த நிகழ்வு. எதிர்பாராமல் நடந்த சில துயரமான நிகழ்வுகளால் எங்கள் கல்லூரிக்கும் அருகில் உள்ள கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் கிட்டத்தட்ட கலவரம் ரேஞ்சுக்கு பிரச்சினை முற்றி விட்டது.
எங்கள் கல்லூரியிலிருந்து மேற்குத் திசையிலும் வடக்குத் திசையிலும் இரண்டு பெரிய நகரங்கள். இரண்டு ஊருக்கும் பேருந்து கல்லூரியால் இயக்கப்படுகிறது.
இப்போது நடந்த பிரச்சினையால் வடக்குப் பகுதிக்கு போகும் பேருந்து நிறுத்தப்பட்டது. எல்லா மாணவர்களும் மேற்கே 40 கிமீ போய் பின்பு அங்கிருந்து 40 கிமீ செல்ல வேண்டிய நிலை. கருவாப்பயல் உள்ளூரிலேயே ரூம் எடுத்துத் தங்கியதால் இந்தப் பயணம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நடந்ததை அறிய பேருந்துக்குள் நாமும் செல்வோம்.
பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. உள்ளே எல்லா ஊர் மாணவர்களும் இருந்தனர். கல்லூரியில் பரவியிருந்த வதந்தியின்படி, ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் எங்கள் கல்லூரி வாசலில் இருப்பதாகவும், வெளியே யார் வந்தாலும்
அடி உதை தான் என்றும் சற்று பயந்திருந்தனர்.
பேருந்துக்குள்ளே ஒரு பயம் கலந்த மௌனம் நிலவியது. பேருந்து மெதுவாக நகர ஆரம்பித்தது. உடனடியாக பேருந்துகளின் எல்லா கண்ணாடிகளும் மூடப்பட்டன.
பேருந்து கேட்டை கடக்கும் போது நண்பர் வண்டியார் தலையை குனிந்து ஷூ லேஸ்களைக் கட்ட ஆரம்பித்தார். மற்ற எல்லா மாணவர்களும் யாராவது தாக்குவார்களோ என்ற பயத்துடன் கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர். நல்ல வேளை எந்தப் பிரச்சினையும் இல்லை.
பேருந்து மெயின் ரோட்டைத் தொட்டதும் எல்லோருக்கும் தற்காலிக நிம்மதி. இந்தப் பதிவின் நாயகன் லொடுக்கு சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனால் ஷூ லேஸ் கட்டி விட்டு நிமிர்ந்த நண்பர் வண்டி முகத்தில் துளி கூட பயம் இல்லை.
இன்பராஜ் லொடுக்குவிடம் கேட்டான், "மச்சான் வண்டி - க்கு தைரியம் அதிகம்டா நாமெல்லாம் பயந்து போயிட்டோம். அவன் முகத்தை பாரு துளி கூட பயம் இல்லை. கேஷுவலா ஷூ லேஸ் கட்டிட்டு கூலா இருக்கான்டா".
லொடுக்கு புன்னகையுடன் சொன்னான், "ஆமாடா ஆனா அவன் போட்டிருக்கிற ஷூ கட் ஷூ டா."
இன்பராஜுக்கு வண்டியின் வீரம் பற்றி தெரிந்து விட்டது.
(நாயி எப்படிடா விட்டா நாலு பேர சீவுற மாதிரி முகத்தை வெச்சிக்கிட்டு இருக்கீங்க)
இப்போ நம்ம ஹீரோ லொடுக்கு பற்றி ஒரு தகவல். பையன் ஒரு காஸனோவா டைப். நீங்க மாசத்துக்கு ஒரு முறை முடி வெட்டுவது மாதிரி இவன் மாசத்துக்கு ஒரு பொண்ணை லவ் பண்ணிக் கொண்டிருப்பான்.
அதுவும் ஒவ்வொருத்தியையும் சின்சியராவே காதலிப்பான். (எப்படிடா உன்னால மட்டும் முடியுது?)
அன்றைய தேதிக்கு அவன் காதலித்த பெண்ணும் அந்தப் பேருந்தில் தான் இருந்தாள். (அது எப்படிங்கடி, கரெக்டா அவனுக்குப் பக்கத்து சீட்டில் வந்து உக்கார்றீங்க? வேற சீட்டே இல்லையா) பேருந்து கிட்டத்தட்ட அபாய எல்லையை தாண்டி விட்டது. எல்லார் முகத்திலும் ஒரு வித நிம்மதி.
அப்போ தான் இன்பா அதை உணர்ந்தான். ஆம். யாரோ ரெண்டு பேர் கண்களால் பேசிக் கொண்டிருந்தனர். அந்த பேச்சின் பொருள் புரிந்து விட்டது.
லொடுக்குவும் அவனுடைய அப்போதைய லவ்வரும் மௌன மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இருவரும் கண்களை சிமிட்டுவதும், தலையை கோணலாக வைத்துக் கொண்டு சிரிப்பதும், கன்னத்தைக் கிள்ளுவது போல சைகை செய்வதும் பேருந்தின் சூழ்நிலையைப் பற்றி சிறிது கூட கவலைப் படாமல் கண்களால் கடலை வறுத்தனர்.
கடைசியாக அவர்கள் பேசியதை இன்பா இன்டர்செப்ட் செய்தான்.
அவள்: நீ எங்க ஊரிலேயே இரங்கி விடேன்டா.
அவன்: இங்கே தங்க இடம் இல்லையே.
அவள்: ஒன்னோட ஃப்ரென்ட் இன்பா வீட்டுக்கு போகலாமே? (அடிப் பாவி அதுக்கு என்னோட வீடு தான் கெடச்சுதா?)
அவன்: இல்ல, அம்மா தேடுவாங்க
(டேய் உண்மைய சொல்லு. ஒங்க தெருவுல கம்ப்யூட்டர் க்ளாஸ் போற ஃபிகரப் பிக்-அப் பண்ணப் போறதுக்கு ஏன்டா நாயே அம்மாவ இழுக்கிற)
அவள்: கடைசி பஸ் பத்து மணிக்கு, அதுல போயேன்டா. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்டா. (அடி நாயி, ஏழு மணியிலேருந்து பத்து மணி வரை அப்படி என்னத்தடி பேசப் போறீங்க)
அவன்: இல்லடா அம்மா தேடுவாங்கடா.
(இதுக்கு மேல பொறுக்க முடியாதுடா, இதையெல்லாம் காதுல கேக்கனுமா? இந்தப் பஸ்ஸுக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகக் கூடாதா?)
இன்பா டென்ஷன் ஆகி விட்டான்.
லொடுக்குவிடம்," டேய் எல்லாவனும் பயந்து போயி உயிரக் கையில புடிச்சுக்கிட்டிருக்கான், ஒனக்கும் அவளுக்கும் லவ்வு கேக்குதோ? இந்த ரணகளத்திலேயும் ஒங்களுக்கு கிலுகிலுப்பு கேக்குதோ? நாளைக்கு ஒனக்கு ஆப்பு இருக்குடா, ஒன்னோட அடையாளம் அவங்களுக்கு தெரியும்டா நாளைக்கு ஒன்ன தொங்கவிடப் போறாங்கடா"
லொடுக்கு பயத்துடன் கேட்டான், "என்ன அடையாளம்டா"
இன்பா, "ஒன்னோட கழுத்துல இருந்த ஜெபமாலைய ஒருத்தன் சொன்னான்டா. ஒன்ன எவன்டா சட்டையில மூனு பட்டன தொறந்து போட்டு போகச்சொன்னது"
பேசிக் கொண்டே போன இன்பா சட்டென்று பேச்சை நிறுத்தினான்.
பின்பு ஆச்சரியமாய் கேட்டான், "உன்னோட ஜெபமாலைய எங்கே டா?"
லொடுக்கு சட்டைப் பையில் இருந்து அதை வெளியே எடுத்தான்.
"இதையா கேட்டீங்க பாஸ்?"
இன்பா அதிர்ச்சியுடன் கேட்டான், "எப்போடா உள்ள வச்ச?"
லொடுக்கு அப்பாவி முகத்துடன், "இப்போ நீ சொன்னவுடனே தான் டா மச்சான்"
இன்பா கேட்டான், "டேய் இது உனக்கு கேவலமா இல்ல"
லொடுக்கு கோபத்துடன், "டேய் நான் யாருன்னு நாளைக்குத் தெரியும்டா" என்று சொல்லிக் கொண்டே வெளியெ வெறித்துப் பார்த்தான்.
எல்லோரும் எதிர்பார்த்த அந்த மறுனாள் வந்தது. ஆனால் லொடுக்கு கல்லூரிக்கே வரவில்லை.
அதற்கு மறு நாள் எங்கள் வகுப்பு மிகவும் பரபரப்பாக இருந்தது.
கருத்து கந்தசாமி மூச்சிரைக்க வந்தான். (எவன் சிக்கப் போறானோ?)
கருத்து, "டேய் மாமா, லொடுக்கு எங்கே டா? அவன வெளியே போக வேன்டாம்ன்னு சொல்லு டா. அவன அடிக்க ஆர்ட்ஸ் பசங்க ப்ளான் போட்டுருக்காங்கடா".
அப்போது வண்டி வாயைத் திறந்தான், "மச்சான், லொடுக்க யாரும் ஒன்னும் பண்ண முடியாதுடா"
நான், "எப்படி டா?"
வண்டி: "மச்சான், யாருகிட்டயும் சொல்லாதே, அவன் கிட்ட ஒரு வெயிட்டான பொருள் இருக்குடா. எத்தனை பேர்ன்னாலும் எதிர்த்து நிற்கலாமாம்டா".
(யார் கிட்டேயும் சொல்லாதேன்னு சொல்லி சொல்லி இவன் எத்தனை பேரு கிட்ட சொன்னானோ)
நான் கேட்டேன், "என்னடா பொருளு கத்தியா? வாளா? இல்ல அரிவாளா?"
வண்டி:தெரியலடா ஆனா எத்தன பேரு வந்தாலும் பார்க்கலாம்ன்னு அவன் சொன்னான்டா"
இது என்னடா கொடுமை.நேத்திக்கு முன்தினம் வரைக்கும் ரொம்ப மென்மையான பையனா இருந்தவன் இன்னிக்கு ஒரு பெரிய ஆயுதம் வச்சிருக்கான்னா அப்படி என்ன வெப்பன், யாரு குடுத்தா?
எத்தனை பேரு வந்தாலும் எதிர்த்து நிக்கற அளவுக்கு என்ன ஆயுதம் அது?
அடுத்த ஒரு மணி நேரத்தில் பதில் கிடைத்தது.
அடுத்த பதிவில் அந்த பேரழிவு ஆயுதம் பற்றி சொல்கிறேன்.

Friday, November 2, 2007
இதுக்கு என்ன பேரு வைக்க?
இது நடந்தப்போ நாங்க மூன்றாவது ஆண்டு இஞ்ஜினியரிங் மாணவர்கள். நான் நான்கு நன்பர்களோடு எங்கள் கல்லூரி-க்கு அருகில் ஒரு டவுன்-இல் ரூம் எடுத்து தங்கியிருந்தேன். சாயந்திரம் ஆனா நேரா என்னோட ரூம் மொட்டை – மாடியிலெ அரட்டை கச்சேரி தான். என்னொட ரூம் – மேட்ஸ் பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ: முதலில் லொடுக்கு, ரொம்ப நல்ல பையன் – ஆனா கூரு கொஞ்சம் கொறைவு. அப்புறமா கருத்து கந்தசாமி, வாய தொறந்தா நாள் முழுக்க கருத்து சொல்லிக்கிட்டே இருப்பான். இவனுக்கு ஒரு நல்ல பழக்கம் என்னான்னா ப்ராப்ளெம் ஸால்விங் ஸ்கில். ஓன்னுமே இல்லாத சப்ப மேட்டர எல்லாம் பெரிய பிரச்சினை ஆக்கி அத அழகா ஸால்வ் பன்னுரதா நெனைச்சிட்டு சொதப்புவான். இவனால வெளியிலே போற எதையோ எடுத்து ஷார்ட்ஸ் – க்குள்ள வுட்டுக்கிட்டவங்க நெறய பேரு. மொத்தத்துல இவரு ஒரு நடமாடும் ரிவிட்டு ஃபேக்டரி.
இன்னொருத்தன் சந்தன குமார். எப்பவாச்சும் கல்லூரி-க்கு வருவான். ரொம்ப நல்ல நன்பன். மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட்.
இன்னொரு மறக்க முடியாத பையன் கானா –பூனா, அதாவது கபடி புயல். இவனோட நிஜ பேரு வெர. நாம சும்மா கானா பூனா – ன்னு கூப்பிடலாம். இந்தப் பதிவோட ஹீரோ இவரு தாங்கோ. இவனும் மெக் தான்.
அப்புறம் இன்னொரு முக்கியமான ஆளு. எங்க பசங்களுக்கு எப்படி கருத்து கந்தசாமி –யோ அது மாதிரி என்னொட க்ளாஸ்ஸுல ஒரு லேடி கருத்து உன்டு. அவளும் இப்பிடி தான். ஓரு நடமாடும் ரிவெட் ஃபேக்டரி.
லொடுக்கு அவளோட நல்ல ஃப்ரென்ட். அவன் கிட்ட தான் அன்னன்னிக்கு ரிவெட் வாங்குறவன் பேர சொல்லுவா. அவ யாரு பேர சொல்லுறாளோ அந்தப் பையன் அவ்ளோ நாள் கஷ்டப்பட்டு தேத்துன ஃபிகரே அவன கழட்டி கடாசிட்டாள்னு அர்த்தம்.
சரி மேட்டருக்கு வர்றேன். நம்ம கானா – பூனா ஒரு கம்ப்யூட்டர் பொன்னு கிட்ட நல்லா ஃப்ரென்ட்லி –யா இருந்தான். நல்ல பேசுவா-ன்னு சொல்வான். ஓரு ஆறு மாசம் கழிச்சு அந்த நாறப்பய அவள லவ் பன்னுறதா சொன்னான். (ஒனக்கு ரிவிட்டு கன்ஃபர்ம்-டா).
அன்னிக்கு சாயந்திரம் எப்பவும் போல மொட்டை – மாடியில் டாப் ஆரம்பிச்சுது. நம்ம கானா பூனா மொகத்துல ஒரு இனம் புரியாத பூரிப்பு. “என்னடா பயங்கர சந்தோஷமா இருக்க போல” மெல்ல ஆரம்பித்தோம்.
அவன் முகம் ரொம்பவே பிரகாஸமானது. வானத்தை ஸீரியஸாகப் பார்த்துக் கொன்டே சொன்னான், “மச்சான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் – டா”.
மனதிற்குள் திட்டினேன், “நாறப்பயலே, அதத்தானடா நாங்களும் சொன்னோம், மேட்டர சொல்லுவியா, நாயி ஒவரா பில்டப் குடுக்குது”.
பொதுவா இந்தப் புதுசா லவ் பன்ற பசங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது என்னான்னா அவங்க லவ்வப் பத்தி யார் கிட்டயாவது சொல்லனும்னு கண்ணுல கொலை வெறியோடு அலைவாங்க. எவனாவது மாட்டினான்னு வச்சுக்கோங்க அவ்ளோ தான். அவள எப்போ மொதல்ல பார்த்தான் (கருமம்!!) அவ எப்போ இவன பார்த்து சிரிச்சா? (எழவு இது வேற) அவ க்ளாஸ்ஸுக்கு உள்ள போயிட்டு திரும்பி பாத்தது அப்படி இப்படின்னு ஒவ்வொன்னுக்கும் இவனே ஒரு காரணம் வச்சி நம்மல சாக அடிச்சிடுவான். இதுல அவ சிரிச்சா ரொம்ப அழகா இருப்பாடா, அவ கண்ணு ரொம்ப ஷார்ப் டான்னு சொல்லி இன்னும் கடுப்பேத்துவான்.
அப்புறமா அவனே கேட்டான், “மச்சான் என்னோட ஆளப்பத்தி என்னடா நெனைக்குற?”
உடனே நான், “அவ ஒரு…”
சொல்லி முடிப்பதற்குள் லொடுக்கு ஸிக்னல் கொடுத்தான்.
ஆப்படியெ ஆஃப் ஆனேன்.
பிறகு லொடுக்கு கேட்டான்,”அவளுக்கு என்னடா இப்போ?”
“மச்சான் அவ என்னோட அம்மா கிட்ட பேசியிருக்காடா தெரியுமா”, இது கானா பூனா.
லொடுக்கு: எப்போ டா?
கானா பூனா: அன்னிக்கு என்னொட போன்ல பேசுறப்போ அம்மா கிட்ட பேசினாடா
லொடுக்கு: ஓ போன்ல எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டிங்களா?
கானா பூனா: ஒரு மாஸமா தான்டா. (சொல்லிக் கிட்டே சுவத்துல இருந்த சுண்ணாம்ப சொரன்ட ஆரம்பிச்சான்).
வெக்கப்படுறாராம்!!!
(டேய் வேனாம்டா.ஓனர் திட்டுவான்டா)
பிறகு அவனே ரொம்ப ஃபீலிங்க்ஸோட சொன்னான், “டேய் நாளைக்கு பதினொரு மணிக்கு கேன்டீன் வர சொல்லி இருக்காடா”
அது வரை அமைதியா இருந்த சந்தானம் “டேய் நாளைக்கு ட்ரீட்டா டா மாப்ள” என்று கேட்டான்.
நம்ம பயலுக்கு வெக்கம் தாங்க முடியல. (போங்கடா நீங்களும் ஒங்க வெக்கமும். அது என்ன பசங்க வெக்கப்பட்டா ரொம்ப கேவலமா இருக்கு?)
அவன் பேசிக்கிட்டே போனான், ”அவள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா, நல்லா பேசுறாடா, எங்க பாத்தாலும் சிரிக்கிராடா, நாளைக்கு அவ என்ன நெனச்சாலும் பரவா இல்லடா, நான் கண்டிப்பா என்னோட லவ்வ சொல்ல போறேன்டா”.
சுவத்துல சுண்ணாம்பு கொறஞ்சு கிட்டே வந்தது.
“சரி நாளைக்கு பாக்கலாம்டா, நாளை மெகா ட்ரீட் ஒன்னு தர்றேன்டா, அவளுக்கு க்ரீட்டிங் வாங்கனும் டா” என்று சொல்லி கொண்டே கிளம்பினான்.
அது வரை அமைதியாக எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கருத்து அவன் போன பின்பு சீரியஸான குரலில் பேசினான்., “மச்சான் ஒன்கிட்ட ஒரு முக்கியமான மேட்டர் பேசனும்டா”
“எவன் ரிவிட்டு வாங்கப்போறான்னு தெரியலையே” மனசுக்குள்ள ஒரு அலார்ம் அடிச்சுது.
“மச்சான், மேட்டர் என்னன்னா, நம்ம கானா பூனாவோட சீனியர்ஸ் வந்து அவன் ஆள அவன் பேர சொல்லி கிண்டல் பண்ணியிருக்காங்க” கருத்து ரொம்ப சீரியஸான குரலில் எஃபெக்டோட பேசினான்.
நான்: அப்புறம் என்ன ஆச்சு
கருத்து: அவ ஹாஸ்டல்ல சொல்லி ஃபீல் பண்ணியிருக்காடா
நான்: என்ன சொல்லி
கருத்து: வேற என்னடா, எப்பவும் போல இவ ஃப்ரென்ட்லியா பழகினத நம்ம பையன் தப்பா நெனச்சுட்டானாம்.
நான்: இது எல்லாவளும் சொல்ற டயலாக் தானடா
கருத்து: நாளைக்கு அவ இந்த கிறுக்கு பயல கேன்ட்டீன் வர சொன்னதே இவ ஃப்ரென்ட்லியா மட்டும் தான் பழகுறா அப்படிங்கற உண்மைய சொல்லத் தானாம்.
நான்: நாசமா போச்சு, இவளுங்க இத ஒரு ஸ்டேன்டர்ட் டயலாக்காவே வச்சிருக்காளுகளாடா. பையன நல்லா சுத்த வுடுறது அப்புறமாஅ ஃப்ரென்ட்ஷிப் அது இதுன்னு டயலாக் வுடுறது கருமம் டா. சரி உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.
(நானா பேசினேனா அல்லது ஏற்கனவே நான் வாங்கின ரிவிட்டு பேச வச்சதான்னு தெரியலைங்கண்ணா)
லொடுக்கு: நம்ம லேடி கருத்து சொன்னாடா மாமு
(ரிவிட்டு உறுதி டா மாப்பு)
நான்: சரி நாளைக்கு என்னடா பண்ணலாம். இந்த நாயி வேற க்ரீட்டிங்க் அது இதுன்னு கண்ணுல வெறியோட அலையிறான்டா.
கருத்து: (பயங்கர சீரியஸான குரலில்) மாமா நாளைக்கு எதாவது பண்ணனும்டா. இவன் ரொம்ப சின்சியரா இருக்கான். அவ எதாவது நெகட்டிவா பேசினா அவ்ளோ தான், இவன் ரொம்ப வெக்ஸ் ஆயிடுவான்டா. ஏதாவது தப்பான டெசிஷன் எடுக்க மாட்டான்னு என்ன நிச்சயம்டா.
(நாயி உக்காந்து யோசிப்பானோ? மூச்சு விடாம பேசுறான்டா)
நான்: டேய் எனக்கும் ஒரு மாதிரி இருக்குடா, அவன் ரொம்ப சென்ஸிட்டிவ்டா. பாரு. சுவத்துல பாதி சுண்ணாம்ப காணோம்டா.
லொடுக்கு: டேய் மாம்ஸ் சீரியஸா பேசுடா, நாளைக்கு என்ன பண்ண.
அன்னிக்கு நைட் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி நாளை காலைல கானா பூனா கேன்டீன் போகும் போது அவன் கூட யாராவது தெளிவான பையன அனுப்பி வைக்கனும்.
கேன்டீன்ல அவங்க ரெண்டு பேரும் பேசும் போது ரெண்டு சைட் டேபிள்ளையும் நம்ம பசங்க இருக்கனும். அவங்க ரெண்டு பேரும் கேன்டீன் போறதுக்கு முன்பே ரெண்டு பசங்கள அனுப்பி இருக்க வைக்கனும்.
கேன்டீனுக்கு எதிரில் இருக்கின்ற மரத்துல ரெண்டு பசங்க இருக்கனும். இவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் டென்ஷன் ஆகி கத்தினாலும் நம்ம பசங்க அவன தனியா தள்ளிகிட்டு எலெக்ட்ரிகல் டிப்பார்ட்மென்ட்க்கு வந்துடனும்.
அன்பு நன்பன் சப்பாத்தி தான் சரியான ஆளு. அவன முதல்லயே கேன்டீன்ல இருக்க வச்சிரலாம். இவன் அவ கூட பேசப் போறப்ப நம்ம நன்பர் விசுவாசராஜன் துனைக்கு இருப்பார்.
கருத்துவின் திட்டம் ஓரளவு நல்லாத்தான் இருந்தது. மறுநாள் காலையில் கானா பூனாவுக்கு தெரியாமல் விசுவாசராஜனுக்கும் சப்பாத்திக்கும் உண்மை சொல்லப்பட்டது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவாக விளக்கப்பட்டது.
மணி பதினொன்று. சந்தானம் கேன்டீனுக்கு வெளியில் நிறுத்தப்பட்டான். சப்பாத்தி உள்ளே ஒரு கோக் பாட்டில வாங்கி கால் மணி நேரமாக உறிஞ்சிக்கொண்டிருந்தான். கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து அவள் வெளியே வந்து கேன்டீன் நோக்கி நடந்தாள். விசுவாசம் மற்றும் கானா பூனா கேன்டீனை நெருங்கி விட்டனர்
நான் எப்பவும் போல என்னோட டிப்பார்ட்மென்ட்டில் உள்ள படிக்கட்டில் உக்காந்து மானாவாரியாக ஸைட் அடித்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு பக்கத்தில் லொடுக்கு. கருத்து குட்டி போட்ட ஏதோ ஒன்றை போல அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். லொடுக்கு கேட்டான், ”மாம்ஸ், லவ்வ சொல்லப் போறவனே ஒழுங்கா இருக்கான் இந்த நாயி ஏன்டா டென்ஷன் ஆவுது”.
நான்,” விடுறா”
அவள் மெதுவாக கேன்டீனுக்குள் சென்றாள். இவனும் உள்ளே போனான்.
விசுவாசராஜன் வாசலில் நின்று கொண்டான்.
எல்லாரும் ஒரு வித டென்ஷனில் இருந்தோம். இவன் காதலை சொல்லுவான், அவ எப்பவும் போல “நான் ஒன்ன என்னோட ஃப்ரென்டா தான் நெனச்சேன்” என்று சொல்லுவாள், இந்தப் பய மனசொடைஞ்சு போயிடுவான். அடுத்து என்ன ஆகும்??
ஒரு ஆறு நிமிஷம் ஆச்சு. அவள் மட்டும் வெளியே வந்தாள். எங்களுக்கு பயங்கர டென்ஷன். அவளோட முகம் வேற ரொம்ப கூலா இருக்கே. பொன்னுங்களுக்கு பசங்க மனச ஒடச்சா ஒரு திருப்தி தான் இல்லையா?
கருத்து லைவ் கமென்டரி கொடுத்தான். “மாம்ஸ் இப்போ பாரு, அவன நம்ம பசங்க தோளுல சாய வச்சு கூப்பிட்டு வருவானுங்க, அவன நம்ம தான்டா சமாதானப்படுத்தனும்”
கருத்து சொன்னது சரி தான். கேன்டீனுக்கு வெலியெ விசுவாசராஜனும் கானா பூனாவும் வந்தார்கள். ஆனால்....
விசுவாசராஜன் முகம் சரியில்லை. பயங்கர டென்ஷன். ஆனால் கானா பூனா முகம் ரொம்ப கூலா இருக்கே என்ன கொடுமை டா இது.
ரெண்டு பேரும் எங்க பக்கம் திரும்பி கூட பாக்கலை. ஆனால் விசுவாசராஜன் முகம் வெளிறி இருந்தது. கிட்டத்தட்ட அரை மயக்கத்தில் இருந்தான்.
எங்களுக்கு ஒரே குழப்பம். சப்ப்பாத்தி எங்கே?
மூன்று பேரும் கேன்டீனுக்கு போனொம். உள்ளே பார்த்தால் சப்பாத்தி அரை மயக்கத்தில் இருந்தான்.
என்னடா இது அவனை தவிர எல்லாரும் நொந்து போயிருக்கானுங்க என்ன நடந்தது.
ஓரு சோடா வாங்கி சப்பாத்தி முகத்தில் அடித்தோம்.
சப்பாத்தி ஸ்லோ மோஷன்-இல் கண்ணு முழிச்சான்.
நடந்ததை சப்பாத்தி சொன்னான்.
“மச்சான் அவ உள்ளே வந்து இவன பாத்து தனியா வேற டேபிளுக்கு கூப்பிட்டா டா. இவனும் போனான்டா. “
நாங்கள்: அப்புறம் என்னடா ஆச்சு?
சப்பாத்தி ஃப்ளாஷ் பேக் போனான்.
அவள்: நான் ஒன்கிட்ட முக்கியமான ஒரு மேட்டர் பேசனும்டா
அவன்: நானும் தான்டா
அவள்: நானே முதல்ல சொல்றேன்டா
ஆவன்: சரிடா
அவள் நம்ம ரெண்டு பேரும் எவ்ளோ நல்லா ஃப்ரென்ட்லியா பழகுறோம்டா? (அடிப் பாவி)
அவன்: ஆமா
அவள்: உன்னோட சீனியர்ஸ் என்னைய கின்டல் பன்னுறாங்கடா
அவன்: என்ன கின்டல் பன்னுறாங்க
அவள்: நீ என்ன லவ் பன்னுறியாம்டா, நம்ம நட்ப கொச்சைப்படுத்துராங்கடா (அடி நாய வாயில நல்லா வரும்)
அவன்: யார் அப்படி சொன்னது சீனியர்ன்னா பெரிய இவங்களா? நம்ம ஃப்ரென்ட்ஷிப்ப கேவலப்படுத்துவாங்களா என்ன.
(அட நாயி நேத்து என்ன டயலாக் வுட்டான்டா)
அவன்: நீ கவலைப்படாதே டா . நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன்டா (அந்த க்ரீட்டிங் என்னடா ஆச்சு)
அவள்: டேய் நீ அவங்க கூட சண்டை எல்லாம் போடாதடா. (ஒன்னோட மூஞ்சிக்கு சண்டை வேற போடனுமா)
அவன்: நீ கவலைய விடுடா. நான் பாத்துக்கிறேன்டா. (டேய் அடங்குங்கடா)
இவ்ளோ தான்டா பேசினாங்க. அப்புறம் ரெண்டு பேரும் ஹேன்ட் ஷேக் பன்னிட்டு போயிட்டாங்கடா. விசுவாசம் இங்கேயே மயங்கி விழுந்துட்டான்டா. நான் அரை மயக்கத்தில் இருந்தப்ப தான் நீங்க வந்தீங்கடா.
இதையெல்லாம் சொல்லும் போதே சப்பாத்தி மறுபடியும் மயக்கம் அடைந்தான்.
நானும் லொடுக்குவும் கருத்துவை முறைத்துப் பார்த்தோம். அவன் மெதுவாக நழுவினான். லொடுக்கு காலில் இருந்த செருப்பை எடுத்தான்.
நான் லொடுக்கு கிட்ட கேட்டேன் “எதுக்குடா செருப்பு? நல்லா பழகிட்டு ஃப்ரென்ட்னு சொன்னாலே அவளுக்கா இல்ல நேத்து வரைக்கும் அவள லவ் பன்னுறதா சொல்லிட்டு இன்னிக்கு உயிர் தோழின்னு வெக்கமே இல்லாம பல்டி அடிச்சானே அவனுக்கா?”
லொடுக்கு: இல்ல மாமா, இந்த நாயிங்க மேட்டர்ல தலைய உட்டோம் பாரு நம்ம ரெண்டு பெரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கலாம்டா.
நானும் லொடுக்குவும் சப்பாத்தியை கைத்தாங்கலாக வெளியெ கூப்பிட்டு வந்தோம்.

Subscribe to:
Posts (Atom)