நான் கல்லூரியை வளாகத்தை விட்டு வெளியே வந்தேன். கேட்டைக் கடக்கும் போது சப்பாத்தி வந்தான். அவனிடம் லொடுக்கு எங்கே என்று கேட்டேன்.
என் முகத்தில் இருந்த சீரியஸ்னெஸ்ஸைப் புரிந்து கொண்ட சப்பாத்தி "என்ன விஷயம்டா " என்றான்.
"அவன் ஏதோ பொருளு வைச்சிருக்கானாமே?" என்றேன்.
"தெரியலையே மச்சான், அவன் வேன் ஸ்டாண்ட்-ல தான்டா இருக்கான் வா போயி பாக்கலாம்" என்றான்.
வேன் ஸ்டாண்ட் கல்லூரியிலிருந்து கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர். சரி நடந்தே போகலாம் என்று வெயிலில் நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியில் மாமா கடை அருகே நன்பன் மாவீரன் "அலறல்" காளி வந்தான்.
"மச்சான் ஒனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?" என்று லொல்லுசபா மனோகர் ஸ்டைலில் கேட்டான்.
"என்னடா மேட்டர்" இது சப்பாத்தி.
"மச்சான் ஒனக்கு மட்டும் சொல்றேன் வேர யாருக்கும் சொல்லாதே"
"சொல்ல மாட்டேன்டா என்ன மேட்டர்"
"மச்சான் லொடுக்கு ஏதோ வெயிட்டா ஆயுதம் வச்சிருக்கானாம்டா"
"எதுக்குடா" இது சப்பாத்தி.
"ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க அவன அடிக்க ஸ்கெச் போட்டாங்களாம்டா, அவனுங்கள எதுத்து நிக்க மாப்ள முடிவு பண்ணிட்டாராம்டா"
"உனக்கு யாரு சொன்னா?"
"நம்ம லொடுக்கு தான் சொன்னான் மச்சான்"
(இவன் ரௌடின்னு இவனே எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு அலையுறானா கெரகம் புடிச்ச பய)
"சரி அவன் இப்போ எங்கே இருக்கான்டா" இது நான்.
"மச்சான் அவன் வேன் ஸ்டாண்ட்-ல தான்டா இருக்கான், அப்புறம் இன்னொரு மேட்டர்டா" இதை சற்று குரலை தாழ்த்திச் சொன்னான்.
"என்ன மேட்டர்"
"மச்சான் ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க இன்னிக்கு காலையில இந்தப் பக்கமா பைக்ல வந்தாங்களாம்டா, அவங்க லொடுக்கத் தான் தேடி வந்திருப்பாங்கன்னு நெனைக்றன்டா"
"அத வுடுறா மாப்ள, வந்தா பாத்துக்கலாம்"
நான் சப்பாத்தியிடம் சொன்னேன், "பயபுள்ள நல்ல புத்திசாலிடா மாப்ள, எல்லாவங்கிட்டேயும் "சாமான்" கொண்டு வந்த மேட்டர சொன்னதோட இல்லாம அவனுங்க கிட்டயே "வேற யாரு கிட்டயும் சொல்லாதே-ன்னு சொல்லி அனுப்பியிருக்கான் பாரு, அங்க தான்டா பையன் நிக்குறான். நம்ம பசங்க யாரு கிட்டயும் சொல்லாதேன்னு சொன்னாத் தான் கண்டிப்பா சொல்லுவாங்க-ன்னு பய புள்ளைக்கு தெரிஞ்சிருக்குடா"
நாங்கள் நேரே வேன் ஸ்டாண்ட்க்குப் போனோம்.
அங்கே குமாருடைய வேன் எங்கே என்று தேடினோம்.
கிடைத்து விட்டது.
வேன் கதவை திறந்தோம். உள்ளே லொடுக்கு சட்டையில்லாமல் பின் சீட்டில் படுத்துக் கிடந்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தோம். எங்கேயும் எந்த பொருளும் இல்லை.
கத்தி, அரிவாள், வாள் என்று எதுவுமே இல்லை.
உள்ளே முழித்துக் கொண்டிருந்த குயில் எங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்னடா தேடுறீங்க"
"இல்ல குயிலு, லொடுக்கு ஏதோ சாமான் வச்சிருக்கான்னு ஊரு முழுக்க அவனே பரப்பிக்கிட்டு இருக்கான். அதத்தான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தோம்டா"
"அவன நாலு மிதி மிதிச்சு எழுப்பிக் கேளு சொல்லுவான்" இது குயில்.
நாங்கள் அவன் சொன்னபடியே செய்தோம்.
லொடுக்கு எழுந்தான்.
"என்ன மாமா"
"டேய் ஏதோ பெரிய ஆயுதம் வச்சிருக்கியாமே, பசங்க சொன்னங்க"
"மாமா ஒனக்கும் கூட தெரிஞ்சு போச்சா. நீ வேற யாரு கிட்டயும் சொல்லிடாதே."
(நாதாரி, நம்ம கிட்டயும் பிட்டப் போடுது பாரு)
"இதுக்கு மேல ப்ரின்சிபலுக்கு மட்டும் தான்டா தெரியனும். மத்த எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு"
"சரி அந்த ஆயுதத்த எங்கே"
லொடுக்கு நிதானமாய் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டான்.
"என்னடா இது பேன்ட்டில் வச்சிருக்கான், ஒரு வேளை "உருண்டை"யாக இருக்குமோ"
(பி.கு: உருண்டை என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நாட்டு வெடிகுண்டு)
கையை வெளியே எடுத்தான்.
அட இது ஜெபமாலை ஆச்சே!
"டேய் இத கழுத்துல தானடா மாட்டுவாங்க, நீ ஏன்டா பாக்கெட்ல வச்சிருக்க"
"இல்ல மாமா சண்ட போடறப்போ அறுந்துடும் இல்லையா"
(எப்புடிறா இப்படி வெக்கமே இல்லாம, மனசாட்சிய கழட்டி வச்சிட்டு பேசறீங்க)
"ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க இத அடையாளமா வச்சு தான் ஒன்னத் தேடுறாங்கன்னு யாரோ சொன்னாங்கப்பா"
"மாமா எவனுக்கும் நான் பயப்பட வேண்டியதில்லை. நான் என்னோட ஆயுதத்தை வச்சு எத்தனை பேரு வந்தாலும் அடிப்பேன் மாமா"
மறுபடியும் பாக்கெட்டுக்குள்ள கைய வுட்டான்.
"ஒரு வேளை நாட்டுத் துப்பாக்கியா இருக்குமோ?"
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதை வெளியே எடுத்தான்.
நானும் சப்பாத்தியும் ஒரு சேர அதிர்ந்து போனோம். அவன் கையில் சின்னதா ஏதோ எல்லிப்ஸ் ஷேப்பில் ஒரு துருப்பிடிச்ச இரும்பு ரிங்க். அதோட ஒரு ஸைடில் நாலு ஸ்பைக் கூர்மையாக??? இருந்தது.
"டேய் என்னடா இது?"
அவன் பெருமையா சொன்னான், "என்னோட தெருவுல ஒரு ரௌடி உன்டு. எனக்கு நல்ல ஃப்ரென்ட். அவன் தான் கொடுத்தான்"
பின் அவனே டெமோ குடுத்தான்.
(கருமம் இதுக்கு டெமோ ஒரு கேடா)
"மச்சான், நல்லாப் பாரு. இத இப்படிக் கையில சொறுகிக்கனும்."
(டேய் நிப்பாட்டு டா)
"அப்புறம் உள்ளங்கைய மூடிக்கோ. இப்பொ இந்த நாலு ஷார்ப் ஸ்பைக் இருக்கு பாரு இது கரெக்டா உன்னோட புறங்கையில ஃபிட் ஆயிடும்."
(ஒனக்கு ஈவு இரக்கமே கிடையாதா நிறுத்து டா)
"யாரு வந்தாலும் ஒரே குத்து. அவனோட மூஞ்சி கிழிஞ்சிடும்"
(யாராவது வந்து காப்பாத்துங்களேன். அய்யோ கொல்றானே.)
சப்பாத்தி நிஜமாவே டென்ஷனாயிட்டான்.
"டேய் இது தான் ஒன்னோட பேரழிவு ஆயுதமா? இத வச்சுத் தான் நீ பத்து பேரன்னாலும் அடிப்பியா?"
"ஏன் இதுக்கு என்னடா குறை"
"டேய் அந்த பசங்க வச்சிருக்கிற அரிவாள் ரேஞ்சுக்குப் பாத்தா பக்கத்து வேன்ல உக்காந்துகிட்டே இந்த வேன்ல இருக்கிறவன வெட்டுவானுங்க. நீ என்னடான்னா இந்த மொண்ணை ரிங்க வச்சிக்கிட்டு பத்து பேர அடிப்பேன், இருபது பேர கடிப்பேன்னு பில்டப் குடுத்துக்கிட்டு இருக்க. இந்த வேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு?"
லொடுக்கு அசராமல் பதில் பேசினான், "சப்பாத்தி, கையில இருக்கிற ஆயுதம் முக்கியம் இல்லைடா. மனசில இருக்கிற தில் தான்டா முக்கியம்"
(என்னமா பேசுறான்டா ங்ஙொய்யால, இதுக்கு தான்டா இவனுக்கு நெறைய ஃபிகருங்க சிக்குது)
நான் சொன்னேன், "டேய் தயவு செஞ்கு இந்த மாதிரி "பயங்கரமான ஆயுதம்" எல்லாம் காலேஜுக்கு கொண்டு வராதேடா"
"நீ கொண்டு வந்த அந்த மொண்ணை துருப் பிடிச்ச இரும்பக் கூட மன்னிச்சிரலாம், ஆனா இதுக்கு நீ குடுத்த பில்டப் இருக்கு பாரு, அது தாங்க முடியல"
உடனே லொடுக்கு, "மாமா, நீ சொல்லுறதால நான் இனிமேல் இந்த ஆயுதத்தை பயன்படுத்த மாட்டேன்"
அவனுடைய "ஆயுதத்தை" ஒரு ஃபீலிங்கோட பாத்துக்கிட்டே உள்ளே வச்சான்.
(ஆமா, இல்லாட்டி இவரு இருபது பேர போட்டு தள்ளிட்டு தான் மறு வேலை பாப்பாரு, நாயி ஓவராப் பேசுறான்டா)
"டேய் எடத்த மாத்தி வையிடா ஏற்கனவே துருப் பிடிச்சு இருக்கு. படக் கூடாத எடத்துல பட்டு செப்டிக் ஆயிடப் போகுது"
அவனுடைய கையில் இருந்த ஜெபமாலை அவனைப் பாத்து நக்கலாகச் சிரித்தது..
2 comments:
ungitta irukkura orea comedy and periya comedy enna theriyumaa? Nee eluthura mokka blog'a kooda nagaichchuvai appidingara label'la poduriyea athuthaan... enakku sirippu thaanga mudiyala... sari matter'ukku varuvom.
dai vengambayale...
1)ethukku unga collge'ukkum arts college'ukkum sanda vandhuchchu? unga pasanga night'oda night'aa poi avanga hostel kodiyila kaanchikittu irundha jatti, komanam,langodu aagiyavatrai thirudinadilayaa? illa unga 2 college'ukkum naduvula irundhaa kuttaiyil yaar k$$d$ kaluvuvathu endra panchaayattilaa? unmaiya maraikkaama sollu...
2)endaa... athuvea iththu pona oru vengaaya bus, athula neenga jannala moodineenga'nnu katha vudreenga. dai mothalla unga naaravaai'ya moodungada, appuram maththadha mooduradappaththi pesalam...
3)adaeyappa, vandi'yoda veeraththa paththi nee pesura? yevanaavadhu lesa arattuna k$$d$'a thookkittu odravan neee,nee maththavana...
4)50 kaasu kuduththaa pichakaaran'kooda jebamaalai vaangi kaluththula thonga viduvaan. ennamo avan kaluththula irukkira maalaiyai satellite moolam kandu pidichcha maadiri buildup kudukkura. avanukku sorinaai pudukku'nnu peyar vachchathu sariyaaththaan irukku. yennaa 1000 pudukku irunthaalum sorinaai pudukku thundaa theriyum.
5)yendaa onga mokkai'kku oru alavea illaiyaada? kadaisiyil eththanai per vandhaalum adiththu vidalaam enru thunindha sorinaai pudukku, verinaai pudukkaga manthil nirkiraar. ippo santhosamaada...
by,
padmashri.maanasthan(pride man).
CEO - BPMPVVVV sangam
(blog'ungara perla mokka podura vengambayalugala veratti veratti vettugira sangam)
govt of India approved,
non profit organisation,
no branches outside chennai,
litigation entertained only in chennai high court,
membership fee - just RS 100 or us$ 2.5 or 2 uk poundsterling,
Donations accepted,
lifetime members-Anand, paandi.
website:www.maanasthan.com
email:maanasthan@yahoo.com
once again u have proved that small life incidents can be much more interesting than any other things. good.
you should have added the causes and reasons behind the tensions between the 2 colleges. atleast come out with these informations in ur next post.
once again lodukku has proved that he is the hero among your group. please do narrate some more stories about him. iam more interested in knowing about his love stories.
you can add more interpretations while describing the incident. interpretations during the narration of the incident is ur major strength. try to exploit it more. the most i like are:
1)(நாயி எப்படிடா விட்டா நாலு பேர சீவுற மாதிரி முகத்தை வெச்சிக்கிட்டு இருக்கீங்க)
2)(டேய் உண்மைய சொல்லு. ஒங்க தெருவுல கம்ப்யூட்டர் க்ளாஸ் போற ஃபிகரப் பிக்-அப் பண்ணப் போறதுக்கு ஏன்டா நாயே அம்மாவ இழுக்கிற)
3)(இவன் ரௌடின்னு இவனே எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு அலையுறானா கெரகம் புடிச்ச பய)
4)(எப்புடிறா இப்படி வெக்கமே இல்லாம, மனசாட்சிய கழட்டி வச்சிட்டு பேசறீங்க)
5)(ஆமா, இல்லாட்டி இவரு இருபது பேர போட்டு தள்ளிட்டு தான் மறு வேலை பாப்பாரு, நாயி ஓவராப் பேசுறான்டா)
only these comments added in the middle of the narration at the right place and at the right degree make ur blogs more interesting.
once again the title has been aptly selected that describes the story very much.
this is not to offend you - i have read ur post "aaviyin advocate". it best describes the contrast between the actual stand and hidden stand by the indian govt. but in my opinion, the blogs in which you cover ur own life incidents are much more interesting than other themes taken by you.sorry, but i have to say that "aaviyin advocate(aa)" is no match for "wmd" or "ithukku enna peyar vaikka(ipv)". wmd and ipv really classical. and all i can say about "aa" is simply good.thats all. i will not be a reader for ur simply good articles. i want posts that are really classical. i will read only those posts in which lodukku, karuthu kandasaamy, maaveeran kali, kaana punaa, kuyil playing the prominent part, and not ur own cooked up stories like "aa" having their mere names. basically iam not interested in any informative blogs like "aa". when iam reading "wmd" or "ipv" i never felt these blog as lengthy.But "aa" is a clear exception. iam not influencing u or ordering you to confine ur blogs to the domain i desire. iam only saying that iam a serious reader of the blogs that falls in my interest. you know what? i read ur each previous blogs for more than 10 times. but iam not going to read "aa" for the second time. once again sorry if i have offended u.
Post a Comment